உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொட்டிகள் அகற்றத்தால் கப் தாங்கல! ரோட்டோரத்தில் தேங்கும் குப்பை

தொட்டிகள் அகற்றத்தால் கப் தாங்கல! ரோட்டோரத்தில் தேங்கும் குப்பை

மாவட்டம் முழுவதும் குறிப்பிட்ட துாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. குப்பை அள்ளுவோர் வரவிட்டாலும் பொதுமக்கள், கடைகள் ஊழியர்கள் இந்த தொட்டிகளில் குப்பையை கொட்டிச் செல்வர். இதனால் ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவது தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் குப்பைத் தொட்டிகள் இல்லாத மாநகராட்சி, நகராட்சி எனும் திட்டம் கொண்டு வரப்பட்டு குப்பைத் தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அனைத்து வீடுகளிலும் துாய்மை பணியாளர்கள் குப்பை பெற்றுக் கொள்வர் என தெரிவிக்கப்பட்டது.ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தும் முன் முறையான திட்டமிடல் ஏதும் இல்லாமல் அமல்படுத்தினர். இவர்கள் குப்பைத் தொட்டிகள் இல்லாததால் ரோட்டோரங்களில் குப்பையை கொட்டிச் செல்கின்றனர். பொதுமக்களும் காலையில் வரும் துாய்மை பணியாளர்களிடம் குப்பை கொடுக்காமல் விட்டுவிட்டால் அவர்களும் தொட்டிகளைச் தேடிச் சென்றுவிட்டு ரோட்டோரங்களில் கொட்டி விடுகின்றனர். இதனால் அனைத்து பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுகிறது.குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சி புறநகர் பகுதிகள் முழுவதுமே குப்பையால் நிரம்பி வழிகிறது. நகரை விட்டு வெளியே செல்லுமிடமெல்லாம் குப்பை மையமாக இருக்கிறது. ஒரு திட்டத்தை அமல்படுத்தும்போது நடைமுறைக்கு சாத்தியமா என்று ஆய்வு செய்யாததன் விளைவு தான் நிரம்பி வழியும் குப்பைக்கு காரணம். மழைகாலம் வேறு துவங்கியதால் மழைநீர் தேக்கத்தால் நோய்தொற்று அபாயமும் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதன் மீது தனிகவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை