உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கன்னிவாடியில் சுண்டல் சாகுபடி துவக்கம்

கன்னிவாடியில் சுண்டல் சாகுபடி துவக்கம்

கன்னிவாடி : பனிப்பொழிவை எதிர்நோக்கி ஆத்துார், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களில் சுண்டல் சாகுபடி துவங்கி உள்ளது.சமீத்திய மழையை நம்பி காரமடை, கசவனம்பட்டி, கோனுார், வண்ணம்பட்டி, வீரக்கல், எஸ்.பாறைப்பட்டி, சுரக்காபட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமானோர் சோளம், மக்காச்சோளம், பயறு வகை சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது சில நாட்களாக, இரவு நேர பனிப்பொழிவு அதிகரிக்க துவங்கியுள்ளது. இதை தொடர்ந்து கரிசல்பட்டி, சின்னப்பபுரம், கந்தசாமிபுரம், வட்டப்பாறை, மேட்டுப்பட்டி, கூத்தம்பட்டி பகுதிகளில் கொத்தமல்லி, சுண்டல் சாகுபடியை பலர் துவக்கி உள்ளனர். விவசாயிகள் கூறுகையில், ' தை, மாசி மாத பனிப்பொழிவை நம்பி சுண்டல் சாகுபடியை துவக்கினோம். கடந்தாண்டு விலை கிடைக்காமல், சுண்டல் மூடை 5 ஆயிரத்திற்கு விற்றது. பனிப்பொழிவு அதிகரித்தால் இந்தாண்டு விளைச்சலும், விலையும் கணிசமாக கைகொடுக்கும் என நம்புகிறோம் '' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ