உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலை என்.எஸ்.எஸ்., மாணவர்கள் டெல்லி, சென்னையில் நடந்த குடியரசு தின அணிவகுப்புகளில் பங்கேற்று பெருமை சேர்த்தனர். பி.எஸ்.சி., புவியியல் மூன்றாமாண்டு மாணவி அமோகா தேசிய குடியரசு தின முகாமிலும், புது டெல்லி கர்தவ்யா பாதையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்றார். பல்கலையின் எம்.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவர் ஸ்ரீராம் சென்னையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றார். இருவர்களும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அதிகாரிகள், சக தன்னார்வலர்களுடன் சந்திக்கும் வாய்ப்பை பெற்றனர். பாராட்டு விழா, கூடுதல் பொறுப்பு துணைவேந்தர் காமகோடி தலைமையில் நடந்தது. பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் நாகமணி உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை