உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில்களில் கும்பாபிஷேகம்

வடமதுரை: வடமதுரை சித்துவார்பட்டி வடுகப்பட்டியில் செல்வசித்திவிநாயகர் கோயில் , ஒத்தப்பட்டி ராஜேந்திர பிள்ளையார் கோயிலகும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் தீர்த்தம் அழைப்புடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர். வடுகப்பட்டி, பாலக்குறிச்சி, சீரங்ககவுண்டனுார், தோப்புப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.இது போல் பாகாநத்தம் ஒத்தப்பட்டியில் ராஜேந்திர பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சரவணபெருமாள் குருக்கள் தலைமையிலான குழுவினர் இதைதை நடத்தி வைத்தனர். சுற்று கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை