உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பு கடைகளால் பெரும் இடையூறு

ஆக்கிரமிப்பு கடைகளால் பெரும் இடையூறு

ஆபத்தை உணராது குளியல்சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை குளத்தில் தண்ணீர் நிறைந்து உள்ளது. சுற்று பகுதி சிறுவர்கள் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவராஜா, சாணார்பட்டி...........--------ரோட்டில் பெரிய பள்ளம்ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோட்டில் காளாஞ்சிபட்டி மேம்பாலத்தின் அருகே பெரிய பள்ளம் உள்ளது. இதனை தெரியாது செல்லும் வாகனஓட்டிகள் விபத்தினை சந்திக்கும் நிலை உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - தமிழ்ச்செல்வன் ஒட்டன்சத்திரம்................--------குப்பையால் சுகாதாரக் கேடுதிண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையில் குப்பை குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .பல்வேறு பகுதியில் இருந்து குப்பையை கொட்டி அகற்றப்படாமல் உள்ளது .நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. குப்பையை அகற்ற வேண்டும். கவுசல்யா, திண்டுக்கல்....................---------சிறுநீர் கழிப்பறைக்கு பூட்டுஒட்டன்சத்திரம் பஸ்டாண்டில் இலவச சிறுநீர் கழிப்பிடம் பூட்டி உள்ளதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். உள்ளூர்,வெளியூர் பயணிகள் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதால் நோய் அபாயம் உள்ளது. கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணன், ஒட்டன்சத்திரம்..................---------ரோட்டில் திரியும் நாய்கள்திண்டுக்கல் லட்சுமி சுந்தரம் காலனி சிவா நகரில் இரவு , பகல் நேரங்களில் நாய்கள் ரோட்டில் சுற்றித் திரிகிறது .அவ்வழியே செல்லும் முதியவர்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்தீக், திண்டுக்கல்......................---------நடவடிக்கை எடுக்கலாமேசெம்பட்டியில் குமுளி பஸ் நிறுத்தம் அருகே மேடையில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பயணிகள் ரோட்டிலே நிற்கின்றனர் . ஆக்கிரமிப்பு அடைகளை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சி. ராஜேந்திரன், செம்பட்டி....................----------சாக்கடையில் கழிவுநீர் தேக்கம்பழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெருவில் சாக்கடையை துார்வராமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது .கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது .கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.காயத்ரி, பழநி..................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி