மேலும் செய்திகள்
ரயிலில் பாய்ந்த பெண் கால்கள் துண்டிப்பு
06-Aug-2025
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தந்தையிடம் அலைபேசியில் பேசி மன்னிப்பு கேட்டுவிட்டு ரயில் முன்பு பாய்ந்து பேக்கரி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். மதுரை ஜெய்ஹிந்துபுரம் புலிப்பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவரது மகன் கோபி சென்ட்ராயன் 23. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பேக்கரி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்தார். நேற்றுமுன்தினம் இரவு நண்பரான அய்யம்பிள்ளை உடன் டூவீலரில் சென்றவர் சிறுநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் அருகே வந்தபோது டூவீலரை நிறுத்த கூறினார். அப்போது அலைபேசியில் தந்தையை தொடர்புகொண்டகோபி சென்ட்ராயன் 'தன்னை மன்னித்துவிடும் படி' தொடர்ந்து கூறி கொண்டே இருந்தார். அதிர்ச்சியடைந்த ராஜபாண்டி மகனை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது அலைபேசியை அய்யம்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு தனியே ரயில் தண்டவாளத்தை நோக்கி சென்றார். அந்த வழியாக மதுரை சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். திண்டுக்கல் ரெயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, எஸ்.ஐ., கேசவன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். போலீசார் கூறுகையில்,'' கோபி சென்றாயன் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனமுடைந்த கோபி சென்ட்ராயன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ததாக'' தெரிவித்தனர்.
06-Aug-2025