உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்தி சில வரிகளில்... தேர்தல் பயிற்சி முகாம்

செய்தி சில வரிகளில்... தேர்தல் பயிற்சி முகாம்

நத்தம்: நத்தம் தாலுகா அலுவலகத்தில் 2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். தேர்தல் துணை வட்டாட்சியர்கள் டேனியல் பிரேம்குமார், ரவிக்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். நத்தம் பகுதி பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிவது, அடிப்படை வசதிகளை செய்வது தொடர்பாக பேசப்பட்டது. ...........ஆர்ப்பாட்டம்பழநி : கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்து பழநியில் கட்டட பொறியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கட்டுமான வேலை பாதிப்பு ,பொருளாதார இழப்பு ,சொந்த வீடு கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை