உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுபான்மை மாணவர்கள் கல்விக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை அமைச்சர் செஞ்சி மஸ்தான் குற்றச்சாட்டு

சிறுபான்மை மாணவர்கள் கல்விக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை அமைச்சர் செஞ்சி மஸ்தான் குற்றச்சாட்டு

திண்டுக்கல்:''சிறுபான்மையின மாணவர்களின் தொடர் கல்விக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக '' சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:சிறுபான்மையினரின் நலனை காக்க அவர்களின் மேம்பட்டிற்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிவாசல்கள், சர்ச்கள், அடக்க தலங்கள் பராமரிப்புக்கு தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன.ஆனால் சிறுபான்மையினரை வஞ்சிக்கும் வகையில் அம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை மத்திய அரசு படிப்படியாக நிறுத்துகிறது. இதன் மூலம் அவர்களின் தொடர் கல்விக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. அந்த நிதி உதவித்தொகையை தொடர்ந்து பெறுவதற்கும்,இடைக்கால நிவாரணம் வழங்கும் பணியிலும் தமிழக அரசு ஈடுபடுகிறது. இதுபோன்ற பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க லோக்சபா தேர்தலில் 'இண்டியா' கூட்டணி வெற்றிபெறும் வகையில் நாம் ஓரணியாக திரண்டு ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை