உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எல்லப்பட்டியில் முருங்கை ஏற்றுமதி மண்டலம்: அமைச்சர் சக்கரபாணி பேச்சு

எல்லப்பட்டியில் முருங்கை ஏற்றுமதி மண்டலம்: அமைச்சர் சக்கரபாணி பேச்சு

ஒட்டன்சத்திரம்: ''எல்லப்பட்டியில் 17 ஏக்கர் பரப்பளவில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்பட உள்ளது'' என, அமைச்சர் சக்கரபாணி பேசினார்.ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வலையபட்டி, எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, சிந்தலைப்பட்டி, மண்டவாடி, காப்பிலியபட்டி, தங்கச்சியம்மாபட்டி, தா.புதுக்கோட்டை ஊராட்சிகளில் ரூ 6.5 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், விருப்பாச்சி ஊராட்சியில் 12.67 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து அவர் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டம் முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லப்பட்டியில் 17 ஏக்கர் பரப்பளவில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்பட உள்ளது. தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை பழுதுபார்க்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2.50 லட்சம் வீடுகள் பழுதுபார்க்கப்பட உள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 5 லட்சம் குடும்பங்களுக்கு தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார். திட்ட இயக்குனர் திலகவதி,ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் சசி, வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, ஒன்றிய தலைவர் அய்யம்மாள், துணைத் தலைவர் காயத்ரிதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி