உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அ.தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணியினர் (படத்தை 2 கால அளவிற்கு ஏற்றாற்போல் கட் செய்து கொள்ளலாம்) அ.தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணியினர்

 அ.தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணியினர் (படத்தை 2 கால அளவிற்கு ஏற்றாற்போல் கட் செய்து கொள்ளலாம்) அ.தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணியினர்

கோபால்பட்டி: -கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் ஓ.பி.எஸ்., அணி ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க., மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என். கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., அணி ஒன்றிய செயலாளர்கள் ஜான் ஜோசப், கருணாகரன், கொசவபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் அருளானந்தம், கவரயபட்டி மனோகரன், விராலிப்பட்டி மாதவன் ஆகியோர்களுடன் 50க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அ.தி.மு.க., சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்பிரமணி, மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், சிறுபான்மையினர் அணி அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை