உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அறிவிக்காத மின்தடையால் இரு நாளாக மக்கள் அவதி

அறிவிக்காத மின்தடையால் இரு நாளாக மக்கள் அவதி

திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ராமசாமிகாலனி பகுதியில் நேற்று முன்தினத்திலிருந்து முறையாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதிலும் பதில் கிடைக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ராமசாமிகாலனி சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 9:15 மணிக்கு மின்தடை ஏற்பட்டு இரவு 7:00 மணிக்கு வந்தது. இதேபோல் நேற்றும் காலை 9:30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. மாலை 5:00 மணி வரை மின்சாரம் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டபோதிலும் முறையான பதிலளிக்காமல் இருந்ததால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். தொடரும் இப்பிரச்னையால் 2 நாட்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவித்தனர். சில வீடுகளில் உணவு சமைக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. அலைபேசிகளில் சார்ஜ் போடுவது முதல் எல்லாமே பாதிப்பு ஏற்பட இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.கேசவன், மின்வாரி உதவிசெயற்பொறியாளர், திண்டுக்கல்: நேற்று முன்தினம் பாலகிருஷ்ணாபுரம் ராமசாமி காலனியில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை இருந்தது. நேற்று நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது. மாலை 5:00 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !