உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அறிவிக்கப்படாத மின்தடை மக்கள் அவதி

அறிவிக்கப்படாத மின்தடை மக்கள் அவதி

திண்டுக்கல் : திண்டுக்கல் - திருச்சி ரோடு காந்திஜி நகரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதியடைந்தனர்.திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் அமைந்துள்ள காந்திஜி நகர்சுற்றுவட்டார பகுதியில் நேற்று நேற்று மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை என 4 மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டது.பொது மக்கள் தரப்பில் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அங்குநகர் பகுதியில் மின் பிரச்னை தொடர்பாக பணிகள் நடப்பதால் விரைவில் மின்சாரம் வந்து விடும் என கூறியுள்ளனர். காந்திஜிநகரில் மட்டும் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதாகவும் மின்வாரிய அதிகாரிகள் முறையாக அறிவிக்காமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எந்தநடவடிக்கையும் அதிகாரிகள் எடுத்தபாடில்லை. இந்நிலையில் நேற்றும் மின்தடை ஏற்பட்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மக்கள் தொடரும் இப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். மின்தடை ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாந்தி,மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு), திண்டுக்கல்: ஆய்வு செய்து தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை