உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக வழங்க நமது விருப்பம் மோடியின் உத்தரவாதம் பெட்டி பா.ஜ., மாவட்ட தலைவர் தனபால் தகவல்

மக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக வழங்க நமது விருப்பம் மோடியின் உத்தரவாதம் பெட்டி பா.ஜ., மாவட்ட தலைவர் தனபால் தகவல்

திண்டுக்கல் : '' பா.ஜ., சார்பில் நமது விருப்பம் மோடியின் உத்தரவாதம் பெயரில் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்க வசதியாக சட்டசபை தொகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் பெட்டிகள் வைக்கப்பட உள்ளதாக,'' பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தெரிவித்தார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : நமது விருப்பம் மோடியின் உத்தரவாதம் என்ற பெட்டிகள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட உள்ளன. கருத்துக் கணிப்பு , தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி பெட்டிகளில் போடலாம். மார்ச் 20 வரை மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் தினந்தோறும் ஒரு பகுதி என அனைத்து பகுதிகளிலும் பெட்டியில் வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் சேகரிக்கப்படுகிறது.இவைகள் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.தேர்தல் முடிவுக்கு பிறகு மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் கோரிக்கையில் அனைத்தையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார். 2019 ஆண்டு இதேபோல் மனுக்கள் பெறப்பட்டு 95 சதவீத பணிகளை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார். பழநி தொப்பம்பட்டி அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த பா.ஜ., நிர்வாகி மகுடீஸ்வரனால் போலீசாரிடம் 20 நாட்களுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டது. அமைச்சர் சக்கரபாணி தலையீடு காரணமாக அனுமதி வழங்கப்படவில்லை. போலீசாரை வைத்து அரசு அடக்குமுறையை கையாள்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை