உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 பழநியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப் பட்டன. பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செப். 12 ல் மீட்டனர். அங்கு இருந்த புதர்களை அகற்றி பக்தர்களின் வசதிக்காக இலவச வாகன நிற்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் 16 கடைகள் ஆக்கிரமித்து இருந்தன. டிச. 8 திருஆவினன்குடி கும்பாபிஷேகம் முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தண்டபாணி சுவாமி நிலத்தில் சன்னதி வீதி பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் இணை கமிஷனரும் தண்டபாணி சுவாமி மட நிலத்தின் தக்காருமான மாரிமுத்து தலைமையில் கோயில் அலுவலர்கள் வருவாய்த் துறையினர் வந்தனர். டி.எஸ்.பி.,தனஞ்செயன், இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கோயில் இணை கமிஷனருடன் ஆக்கிரமிப்பு கடை நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து போராட முயன்ற இவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். கடையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த கடை வியாபாரிகள் கால அவகாசம் வழங்க கோரினர். இதை தொடர்ந்து போதுமான அவகாசம் வழங்க 16 கடைகளும் அகற்றப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை