உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில்வே சப் வேவுக்கு கூரை

ரயில்வே சப் வேவுக்கு கூரை

எரியோடு: எரியோடு அருகே செங்கோட்டைப்பட்டியில் தினமலர் செய்தி எதிரொலியாக ரயில்வே 'சப் வே' வில் கூரை அமைக்கும் பணி நடக்கிறது.எரியோடு அருகே ஒத்தக்கடையில் இருந்து செங்கோட்டைபட்டி கிராமத்தை இணைக்க தார் ரோடு உள்ளது. இடையில் குறுக்கிடும் ரயில் பாதையை கடக்க பல ஆண்டுகளாக ஆளில்லா லெவல் கிராசிங் இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டது. கூரை அமைக்கப்படாததால் மழை நேரத்தில் பெருமளவில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது ' சப் வே' வுக்கு கூரை அமைக்கும் பணி நடக்கிறது. மக்களின் பிரச்னை தீர உதவிய தினமலர் நாளிதழுக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை