உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேர்தல் முடிந்துவிட்டது; அடுத்த தேர்தலில் சேர்ந்து விடுவார்கள்: காங்., எம்.பி., கார்த்திக்கு அமைச்சர் பெரியசாமி பதிலடி

தேர்தல் முடிந்துவிட்டது; அடுத்த தேர்தலில் சேர்ந்து விடுவார்கள்: காங்., எம்.பி., கார்த்திக்கு அமைச்சர் பெரியசாமி பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: '' தி.மு.க., கூட்டணியில் இருக்க நாம் கூனி, குறுகிப் போக தேவையில்லை'' என காங்கிரஸ் எம்.பி., கார்த்தி பேசியது சர்ச்சையானது. இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பெரியசாமி, ''தேர்தல் முடிந்து விட்டது. அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள்''எனக் கூறினார்.இது தொடர்பாக அமைச்சர் பெரியசாமி கூறியதாவது: தேர்தல் முடிந்து விட்டது. அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள். கருத்து வேறுபாடுகள் வரலாம். இண்டியா கூட்டணியை உருவாக்கி 40க்கு 40 வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்துள்ளோம். கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை. வாதங்களுக்கு வாதம், அரசியலுக்கு அரசியல் என எல்லாவற்றையும் சந்தித்து வந்த இயக்கம் தி.மு.க.அண்ணாத்துரை, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் உழைப்பால் உயர்ந்த தலைவர்கள். அந்த தலைவர்கள் தற்போது கல்விக்காக அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பழநியில் கிரிவலப் பாதையை மக்களின் வசதிக்காக ஒழுங்குபடுத்தி உள்ளனர். மற்ற தெருக்களை நிர்வாகம் சுத்தமாக, சுகாதாரமாக பேணி காக்க வேண்டும் என ஹிந்து அறநிலையத்துறை விரும்புகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி முறைகேடு தொடர்பாக விசாரணை நடக்கிறது. முழுமையான விசாரணைக்கு பின்பு தவறு யார் செய்திருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 27, 2024 12:02

காங்கிரஸ் கட்சி எழும்பு துண்டை வீசினால் கவ்விக்கொண்டு ஓடும் நாய் என்கிறாரோ அமைச்சர்.


Balasubramanian
ஜூலை 26, 2024 20:24

கூட்டணி இல்லை என்றால் திமுக இத்தனை சீட்டுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்க முடியுமா? என்றும் கூறுவார்கள்!


yts
ஜூலை 26, 2024 19:47

இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை


krishna
ஜூலை 26, 2024 19:07

YAARUKKUM VEKKAM ILLAI.ADHUVUM MAFIA MAINO CONGRESS KUMBAL DRAVIDA MODEL KUMBALUKKU 100% KIDAYAADHU.


sundarsvpr
ஜூலை 26, 2024 18:27

தி மு க ஒரு யானை. கூட்டணி கட்சிகள் குருடர்கள். குருடர்கள் யானையை தடவி பார்ப்பதுபோல் யானை சென்றுவிட்டால் குருடர்கள் என்ன செய்வார்கள்?


பிம்பிலாக்கி பிளாப்பி
ஜூலை 27, 2024 06:44

ஆனா பாருங்க அந்த யானை தேர்தல் வந்துட்டா கூட்டணிதான் வைச்சுக்கும். தனியா நிக்க அவ்ளோ பயம்.


R.P.Anand
ஜூலை 26, 2024 18:20

நாம என்னத்த சொல்றது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை