உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கருவேலத்தால் மூழ்கிய வேலாயுதக்கவுண்டனுாார் சின்னக்குளம்

 கருவேலத்தால் மூழ்கிய வேலாயுதக்கவுண்டனுாார் சின்னக்குளம்

குஜிலியம்பாறை: வேலாயுதக்கவுண்டனுார் சின்னக்குளம் கருவேலத்தால் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் முட்புதர்களை அகற்றி குளத்தை துார்வார வேண்டும். குஜிலியம்பாறை ஒன்றியம் வடுகம்பாடி ஊராட்சி வேலாயுத கவுண்டனுார் அருகே உள்ளது சின்ன குளம். புளியம்பட்டி கூம்பூர் மெயின் ரோடு அருகே உள்ள இக்குளம் நிறைந்தால் சுற்றுப்பகுதி கிணறுகள்,போர்வெல்களில் போதிய நீர் ஆதாரம் கிடைக்கும். தற்போது இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் குளமானது சில மாதங்களாக வறண்டு கிடக்கிறது. நீர் இன்றி வறண்டு கிடக்கும் இக்குளத்தில் சுற்றுப்பகுதி மக்கள் ஆடு மாடுகளை மேய்த்து வந்தனர். தற்போது இக்குளத்தில் கருவேல முட்கள் நிறைந்து மரங்களாகி புதர்காடாக காட்சியளிக்கிறது. சுற்றுப்பகுதி மக்கள் ஆடு மாடுகளை மேய்க்க கூட குளத்திற்குள் செல்ல முடியவில்லை. சுற்றுப்பகுதி மக்களின் நலன் கருதி குளத்தில் உள்ள கருவேல முட்களை முற்றிலுமாக அகற்றி குளத்தை துார்வார வேண்டும். இதோடு வரத்து வாய்க்காலையும் துார்வார வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. முறையாக துார்வாரலாம் க.சுப்பிரமணி,விவசாயி, வேலாயுத கவுண்டனுார்: சின்னக்குளத்தில் கருவேல முட்கள் நிறைந்து கிடப்பதால் மக்கள் ஆடு மாடுகளை மேய்க்க கூட குளத்திற்குள் செல்ல முடியவில்லை. குளத்தின் மதகு பகுதியில் பார்த்தால் செடிகள் ஆள் உயரத்திற்கும் வளர்ந்து புதர்காடாய் காட்சியளிக்கிறது. குளத்தில் மையப் பகுதி, குளம் முழுவதும் கருவேல முட்கள் மூடி கிடக்கின்றன. நடப்பு ஆண்டில் இதுவரை போதிய மழை , நீர்வரத்து இல்லாத நிலையில் இப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. மழைக்காலம் முடிந்த பிறகு குளத்தில் தேங்கும் தண்ணீர் வற்றிய பிறகு குளத்தை முறையாக துார்வார வேண்டும். தேவை நடவடிக்கை ப.திருமுருகன், தே.மு.தி.க., தொகுதி பொறுப்பாளர், புளியம்பட்டி : இப்பகுதியில் போதிய மழை இல்லாத நிலையில் குளங்களுக்கு நீர் வரத்து என்பது அறவே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டங்களில் போதிய மழை பெய்து பெரும்பாலான குளங்கள் நிரம்பி இருக்கும். தொடர் மழை பெய்யாவிட்டால் கடும் வறட்சி நீடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காவிரி குடிநீர் வருவதால் ஓரளவு குடிநீர் பிரச்னை இல்லை. இக்குளத்தை முறையாக துார் வாரி ஆழப்படுத்த வேண்டும். கரைகளையும் பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை