உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயிலில் திருடிய இருவர் கைது

கோயிலில் திருடிய இருவர் கைது

வடமதுரை : சீலப்பாடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், வீரபத்திரன், திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெரு பாண்டி என மூவரும் பெரியகோட்டை வன்னிய பாறைபட்டியல் நாகம்மாள் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து பணம், ஒரு குத்துவிளக்கையும் திருடி ஆட்டோவில் தப்பினர். கிராமத்தினர் துரத்தி சென்று திண்டுக்கல் ஏர்போர்ட் நகர் அருகே திருடர்களை பிடித்தனர். ராமகிருஷ்ணன், பாண்டி சிக்கினர். சிக்கிய இருவரையும் வடமதுரை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி கைது செய்தார். தப்பிய வீரபத்திரனை போலீசார் தேடுகின்றனர். ரூ.800 ரொக்கம், குத்துவிளக்கு பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !