உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் நடவடிக்கை கோரி கிராமத்தினர் மறியல்

 விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் நடவடிக்கை கோரி கிராமத்தினர் மறியல்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே ஆட்டோ மோதி பெண் பலியான நிலையில் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை கோரி கிராமத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பழைய வத்தலக்குண்டை சேர்ந்தவர்கள் ரத்தினம் 55, முத்துலட்சுமி 48, பிச்சையம்மாள் 50. 100 நாள் வேலை முடித்து வீடு திரும்பினர். பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் ரத்தினம் இறந்தார். மற்ற இருவரும் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் தப்பினார். விபத்து நடந்து பல மணி நேரம் ஆகியும் ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வத்தலக்குண்டு போலீஸ் ஸ்டேஷன் முன்பு முற்றுகை, மறியல் போராட்டத்தில் கிராமத்தினர் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் மறியலை கைவிட்டனர். இறந்தவர் உறவினர்கள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தும் கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை