| ADDED : நவ 19, 2025 05:59 AM
அதிக எடைகளால் விபத்து திண்டுக்கல்லில் வாகனத்தில் அதிக அளவில் மூடைகளை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது .தொங்கியபடியே செல்வதால் பின்வரும் வாகனங்களில் பயணிப்போர் அச்சத்துடன் செல்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகானந்தம், திண்டுக்கல்............---------- ரோட்டில் ஓடும் குடிநீர் பழநி காந்தி மார்க்கெட் அருகே ரோட்டில் குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் .இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாலதி பழநி. ...........----------கால்நடைகளால் இடையூறு பழநி -திண்டுக்கல் ரோடு காலேஜ் பஸ் ஸ்டாப் அருகே சுற்றி திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. வாகனங்களில் செல்வோர் ,ரோட்டில் பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர்.செந்தில்குமார், பழநி. .............---------- நிழற்குடை அருகே குப்பை திண்டுக்கல் அருகே என்.எஸ்.நகர் பயணிகள் நிழற்குடை அருகே குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை சிதறி கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது . குப்பையை அகற்ற வேண்டும்.வசந்தி, என்.எஸ்.நகர். .........----------கழிவுநீருடன் மழை நீர் தேக்கம் மேலக்கோவில்பட்டி அம்பேத்கர் நகரில் சாக்கடை இல்லாததால் மழை பெய்யும் போது கழிவுநீருடன் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை கட்டித்தர வேண்டும். தங்கபாண்டி, மேலக்கோவில்பட்டி. ........---------நாய்களால் அச்சம் திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி விக்னேஷ் நகரில் சுற்றி தெரியும் நாய்களால் பாதசாரிகள் ,வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர் .குடியிருப்பு பகுதிக்கு செல்வோரும் பயத்துடன் உள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கார்த்திகேயன், சீலப்பாடி. ............-------- ரோடை சீரமையுங்க திண்டுக்கல் நாகல் நகர் ரயில்வே மேம்பாலத்தில் பல இடங்கள் குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விபத்துக்கள் நடப்பதால் மேம்பால ரோட்டை சீரமைக்க வேண்டும் எம்.ஆர். ஜெயச்சந்திரன், திண்டுக்கல். .........--------