உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதலமைச்சர் கோப்பை விளையாட்டு ஆலோசனை

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு ஆலோசனை

ஈரோடு: முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடத்துவது தொடர்பாக, ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஸ்குமார் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் பேசியதாவது: முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் ஈரோடு மாவட்ட அளவில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், மக்கள் மற்றும் அரசு ஊழியர் என ஐந்து பிரிவுகளில், ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக பங்கேற்கும் வகையில், 53 வகையான போட்டி நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் போட்டி நடக்கும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர், www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மணீஷ், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ