உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாகனம், இயந்திரம் பற்றாக்குறை பாதாள சாக்கடை பணியில் சிக்கல்

வாகனம், இயந்திரம் பற்றாக்குறை பாதாள சாக்கடை பணியில் சிக்கல்

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் ஏற்படும் குளறுபடிகளை சரி செய்ய, போதிய வாகனங்கள் இல்லாததால், அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாதாள சாக்கடை பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில், மண்ட-லத்துக்கு தலா ஒரு செப்டிக் வாகனம் மட்டுமே உள்ளது. இதில் இரு வாகனங்கள் பழுதடைந்துள்ளது. அதேபோல் குழாயில் ஏற்-படும் அடைப்புகளை நீக்க, 13 அடைப்பு நீக்கும் வாகனங்கள் தேவை. ஆனால் நான்கு வாகனம் மட்டுமே உள்ளது. இதிலும் இரு வாகனங்கள் பழையது என்பதால் அடிக்கடி பழுதடைகிறது. இவை தவிர கழிவுநீர் நெட்வொர்க் பராமரிக்க, மனித வளத்தை தவிர்க்கும் வகையிலும் பயன்படுத்தப்படும் ஜெட் ராடிங் இயந்தி-ரங்கள், உறிஞ்சு மற்றும் உலர்த்தும் இயந்திரங்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பாதாள சாக்கடை குழாயில் ஏற்படும் குளறுப-டிகளை சரி செய்வதில் சிரமம் உள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை