உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் கம்பிகளை உரசிய 10,113 மரக்கிளைகள் அகற்றம்

மின் கம்பிகளை உரசிய 10,113 மரக்கிளைகள் அகற்றம்

ஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில், கடந்த ஜூலை மாதம் மேற்-கொண்ட பராமரிப்பு பணியில், மின் கம்பிகளை உரசியபடி சென்ற, 10,113 மரக்கிளைகள் அகற்றப்பட்டன.ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலை-செல்வி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில், கடந்த, 1 முதல், 28 வரை ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட, எட்டு துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணிகள் நடந்தன. உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பி-களில் உரசிய, 10,113 மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. 137 பழுதடைந்த மின் கம்பங்கள், 133 சாய்ந்த நிலை மின் கம்பங்கள் சரி செய்யப்பட்-டன.தாழ்வாக சென்ற மின் கம்பிகளுக்கு நடுவே புதிதாக, 93 மின் கம்-பங்கள் நடப்பட்டன. 326 பழுதடைந்த இழுவை கம்பி சரி செய்-யப்பட்டு, 806 பழுதடைந்த பீங்கான்கள் மாற்றப்பட்டுள்ளன. 1,037 இடங்களில் பழுதடைந்த ஜம்பர் ஒயர் மாற்றம் செய்யப்-பட்டு, 365 மின் மாற்றிகளில் உள்ள காற்று இடைவெளி திறப்பான் சரி செய்யப்பட்டன.மேலும், 236 மின் மாற்றிகளில் எண்ணெய் அளவு சரி செய்யப்-பட்டு, 317 பகுதிகளில் தாழ்வாக சென்ற மின் கம்பிகள் சரி செய்யும் பணி நடந்தது. 25 இடங்களில் வெளியில் தெரிந்த புதைவட கேபிள் சரி செய்யப்பட்டது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை