உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முன்னுரிமை அடிப்படையில் கடைகள் கோரி மனு

முன்னுரிமை அடிப்படையில் கடைகள் கோரி மனு

புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் வாரச்சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பில், 200க்கும் மேற்பட்டோர், புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்து, கமிஷனரிடம் மனு கொடுத்தனர். மனு விபரம்: புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறம், சத்திரம் பள்ளி அருகே அமைந்துள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து வருகிறோம். இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் கட்டியுள்ள கட்டடத்தில், தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு, 192 கடைகளை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை