உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.10 லட்சம் மோசடி சிறை வார்டன் கைது

ரூ.10 லட்சம் மோசடி சிறை வார்டன் கைது

மொரப்பூர் : மொரப்பூர் அருகே, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஜெயில் வார்டனை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோணம்பட்டியை சேர்ந்தவர் தங்கராசு, 34; இவர் கடந்த, 2011 ல் சிறை காவலராக பணியில் சேர்ந்து, தற்போது சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபு-ரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக, பணிக்கு செல்லாமல் இருந்தார். மொரப்பூர் அடுத்த அம்பாளப்பட்டியை சேர்ந்த அரு-ணாச்சலம், 21, என்பவரிடம், சுங்கத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 10 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார். ஆனால், வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பி தர-வில்லை. அருணாச்சலம் புகார் படி, மொரப்பூர் போலீசார் தங்கரா-சுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ