உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாடகை செலுத்தாததால் கோவில் கட்டடம் மீட்பு

வாடகை செலுத்தாததால் கோவில் கட்டடம் மீட்பு

ஈரோடு, : ஈரோடு சூரம்பட்டியில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்-பாட்டில், கருவண்ணராயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 110 சதுரடி கட்டடம், சிவகுமார் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஓராண்டுக்கு மேலாக வாடகை செலுத்தவில்லை. இது தொடர்பாக அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கில், சிவகுமார் கட்டடத்தை காலி செய்ய நீதி-மன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உதவி ஆணையர் நந்த-குமார் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள், கோவி-லுக்கு சொந்தமான கட்டடத்தை மீட்டனர். அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிப்பிடும் வகையில், அறிவிப்பு பலகை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை