உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரிடியம் மோசடி புகாரில் 3 பேர் கைது

இரிடியம் மோசடி புகாரில் 3 பேர் கைது

சத்தியமங்கலம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 43; சத்தி, சிக்கரசம்பாளையம் பாரதி நகரில் வசித்தபடி கூலி வேலை செய்து வருகிறார். சத்தி, தேள்கரடு, அண்ணா நகர் பாண்டியன், 43, அவரது நண்பர்களான கரட்டூர் ஜீனத்குமார், 27; கொமராபாளையம் பிரபு, 36; அன்னுார் கார்த்திக் ஆகியோர், ஒரு மாதத்துக்கு முன் டாஸ்மாக் பாரில் சுப்பிரமணியனுக்கு பழக்கமாகியுள்ளனர். தங்களிடம் இரிடியம் சொம்பு உள்ளதாகவும், விற்று கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் சுப்பிரமணியனிடம் கூறியுள்ளனர்.சொம்பை காட்டுமாறு கேட்டதற்கு, ௧௦ ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். பணத்தை கொடுத்தும் சொம்பை காட்டவில்லை. பலமுறை வற்புறுத்திய பிறகு, தவளகிரி ஆண்டவர் மலைக்கோவில் அருகிலுக்கு வரவழைத்து சொம்பை காட்டியுள்ளளனர். போலி என்பதை உணர்ந்து, ௧௦ ஆயிரம் ரூபாயை திரும்ப தருமாறு சுப்பிரமணியன் கேட்டுள்ளார். ஆனால், பணம் தர மறுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்தி சத்தி போலீசில் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின்படி, பாண்டியன், ஜீனத்குமார், பிரபு என மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ