உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் பலி

யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் பலி

புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், விளாமுண்டி வனச்சரகத்தில் தங்கராஜ், 49, என்பவர் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை, சிங்கமலை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வனப்பகுதியில் இருந்த ஒற்றை யானை தங்கராஜை திடீரென துரத்தியது. தப்பி ஓடிய தங்-கராஜை, யானை துரத்தி பிடித்து தும்பிக்கையால் தாக்கி காலால் மிதித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.அவர் கூச்சலிட்டதால், வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்டி அடித்தனர். படுகாயம் அடைந்த தங்கராஜை மீட்டு, சத்தி-யமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இது குறித்து, விளாமுண்டி வனத்துறை அதிகாரிகள் மற்றும் பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழங்கு-டியினத்தை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் தங்கராஜூக்கு, லட்சுமி என்ற மனைவி, திவ்யா என்ற மகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை