| ADDED : ஜூலை 08, 2024 07:10 AM
தாராபுரம் : தாராபுரம் நகருக்குள் அரசு பஸ்கள் செல்லாததை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தாராபுரம் அருகே பழநி சாலையில் மணக்கடவு கிராமம் உள்ளது. இங்கு நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:தாராபுரம் செல்லும் பஸ்கள், பைபாஸ் சாலை வழியாக பஸ் ஸ்டாண்டை அடைகின்றன. இதற்கு முன் ஐந்து சாலை சந்திப்பு, தாலுகா ஆபீஸ், மின்வாரிய அலுவலகம் வழியாக பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்கள் சென்றபோது, தாலுகா ஆபீஸ், அரசு மருத்துவமனை மற்றும் சார்-பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவ-லக பணி தொடர்பாக செல்லும் கிராமப்புற மக்களுக்கு வசதியாக இருந்தது. இப்போது பைபாஸ் சாலை வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்கின்றன. இதனால் அங்கிருந்து வேறு பேருந்தில், அரசு மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, மீண்டும் நகருக்குள் பேருந்துகள் செல்ல உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.