உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மீனவர்களை தவிக்க விட்ட வனத்துறை அறிவிப்பு

மீனவர்களை தவிக்க விட்ட வனத்துறை அறிவிப்பு

அந்தியூர், : வரட்டுப்பள்ளம் அணையில், மீனவர்கள் சங்கம் சார்பில், தினமும் மீன்கள் பிடித்தல் நடக்கிறது. இந்நிலையில் வனத்துறை-யினர் நேற்று முன்தினம், தங்களிடம் அனுமதி பெறாமல், மீன-வர்கள் மீன் பிடிக்கக்கூடாது என அறிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், அந்தியூர் வனத்துறை அலுவலகம் முன் நேற்று திரண்டு, ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து மீனவர் சங்கம், வனத்துறையினர் இடையே பேச்சு-வார்த்தை நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மீன் பிடித்து வரும் நிலையில், இந்த திடீர் உத்தரவால், அனைவரும் பாதிக்கப்படுவர் என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை, மாவட்ட வன அலுவல-ரிடம், வனத்துறையினர் பேசினர். இதன் பிறகு மீன்கள் பிடிக்க அனுமதி வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை