உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெட்டிய இடத்தில் ஒரு மரம் நட்டு பராமரிக்க ரூ.1,060 செலவு

வெட்டிய இடத்தில் ஒரு மரம் நட்டு பராமரிக்க ரூ.1,060 செலவு

ஈரோடு: சித்தோடு - கோபி, 4 வழிச்சாலையில் வெட்டப்பட்ட மரத்தை மீண்டும் நட்டு பராமரிக்க ஒரு மரத்துக்கு, 1,060 ரூபாய் செலவாகிறதாம்.ஈரோடு மாவட்டம் சித்தோடு முதல் கோபி வரை, நெடுஞ்சாலை துறை சார்பில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இப்பணிக்காக பல நுாறு மரங்கள் வெட்டப்பட்டது. இது தொடர்பாக, கவுந்தப்பாடி அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் அனுப்பினார். அதில், சித்தோடு - கோபி வரை சாலையின் இரு புறங்களிலும் எத்தனை மரங்கள், என்னென்ன மரங்கள் வெட்டப்பட்டன, புதிதாக மரக்கன்று நட எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன, மரக்கன்றை எவ்வளவு காலம் பராமரிப்பீர்கள் என, கேட்டுள்ளார்.இதற்கு திருப்பூர், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் - 2, கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியதாவது:சித்தோடு - கோபி வரை பூவரச, பலாமரம், பனை, புங்கை, புளி, இலவாழை, தைலரம், வாகை மரம் என பல்வேறு மரங்கள், 3,532 வெட்டப்பட்டுள்ளன. ஒரு மரக்கன்று நடுவதற்கு, 1,060 ரூபாய் செலவாகும். இம்மரக்கன்று, 5 ஆண்டு காலம் பராமரிக்கப்படும் என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை