உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 10 முதல் பிளஸ் 2 வரை துணை தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்க யோசனை

10 முதல் பிளஸ் 2 வரை துணை தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்க யோசனை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 10 முதல், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வை எழுதாதவர்கள் ஜூன் மாதம் நடக்கும் துணை தேர்வு எழுத இன்று (16) முதல் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு கடந்த, 6ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவு கடந்த, 10, பிளஸ் 1 தேர்வு முடிவு கடந்த, 14ல் வெளியானது. தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்கு துணை தேர்வு நடக்க உள்ளது. பிளஸ் 2 க்கு வரும் ஜூன், 24 முதல், ஜூலை, 1 வரையும், பிளஸ் 1க்கு ஜூலை, 2 முதல், 9 வரையும், 10ம் வகுப்புக்கு ஜூலை, 2 முதல், 8 வரையும் துணை தேர்வுகள் நடக்க உள்ளது. இத்தேர்வில், பள்ளி மாணவர்களாக பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வருகை புரியாத மாணவ, மாணவியர், அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு மீண்டும் தேர்வு எழுத, அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.இன்று முதல் ஜூன், 1 வரை (ஞாயிறு நீங்கலாக) காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதில் தனித்தேர்வர்களாக இருந்தால், கல்வி மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள், www.dge.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் அறியலாம். துணை தேர்வுக்கு ஜூன், 1க்குள் விண்ணப்பிக்க தவறுபவர்கள் வரும் ஜூன், 3, 4ல் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பித்ததும் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி, தேர்வுக்கான நுழைவு சீட்டை பதிவிளக்கம் செய்யலாம். அதில் தேர்வு மையம் குறித்த விபரம் தெரியவரும்.இத்தகவலை, ஈரோடு அரசு தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை