உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் 15 பயணிகள் உயிர் தப்பினர்

தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் 15 பயணிகள் உயிர் தப்பினர்

பவானி:சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ் நேற்று அதிகாலை புறப்பட்டது. சென்னையை சேர்ந்த கார்த்திக், 43, ஓட்டினார். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகில், சத்தி ரோடு பாலம் அருகே நேற்று அதிகாலை, 4:40 மணிக்கு வந்தபோது, இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பஸ்ஸில் இருந்த, 15 பயணியரையும் உடமைகளுடன் வெளியேற அறிவுறுத்தினார். அவர்கள் சற்றே பதற்றத்துடன் வெளியேறிக் கொண்டிருந்த போதே, கரும்புகை சூழ்ந்து பஸ் எரிய தொடங்கியது. பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், 80 சதவீத பஸ் எரிந்து சேதமடைந்தது. தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சாலையில், ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை