உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேன் மீது கார் மோதியதில் 3 கல்லுாரி மாணவர்கள் பலி

வேன் மீது கார் மோதியதில் 3 கல்லுாரி மாணவர்கள் பலி

சத்தியமங்கலம்:ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் முகில் நிவாஸ், 22; கால்பந்து வீரர். இவரது நண்பர்கள் ரோகித், 18, ஸ்ரீனிவாஸ், 17. மூவரும் சத்தியமங்கலம் தனியார் பொறியியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்கள். மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன், 22, தர்மேஷ், 19. இவர்கள் ஐந்து பேரும் ஈரோடிலிருந்து ஆசனுாருக்கு, 'ஹூண்டாய் வெர்னா' காரில் நேற்று முன்தினம் இரவு சென்றனர். முகில் நிவாஸ் காரை ஓட்டினார்.சத்தியமங்கலம் அருகே வடவள்ளி முருகன் கோவில் மேடு பகுதியில், எதிரே தக்காளி லோடு ஏற்றி வந்த, 'பிக்அப்' வேன் மீது, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மோதியது. இதில், முகில் நிவாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.தர்மேஷ், ரோகித் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தனர். ஸ்ரீனிவாஸ், சீனிவாசன் மற்றும் வேன் டிரைவரான, சேலம் மாவட்டம் கண்ணாமூச்சியைச் சேர்ந்த சிவகுமார் படுகாயமடைந்தனர். மூவரும் தனியார், அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை