உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூன்று இடங்களில் வாகன சோதனை கோபியில் ரூ.3.24 லட்சம் பறிமுதல்

மூன்று இடங்களில் வாகன சோதனை கோபியில் ரூ.3.24 லட்சம் பறிமுதல்

கோபி: கோபியில் மூன்று இடங்களில் நடந்த வாகன சோதனையில், 3.24 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கோபி அருகே பாரியூரில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஆட்டோவில் வந்த கோபியை சேர்ந்த சுரேஷிடம், 42, உரிய ஆவணமின்றி இருந்த, 1.51 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கோபி அருகே கோவை பிரிவில், தேர்தல் பறக்கும்படை குழுவினர் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சரக்கு ஆட்டோவில் வந்த டிரைவரான நம்பியூரை சேர்ந்த, அபாஸிடம், 27, உரிய ஆவணம் இல்லாததால், 1.16 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோல் கோபி அருகே கெட்டிச்செவியூரில், பறக்கும்படை குழுவினர் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தியூரை சேர்ந்த ஜெயராமன், 40, சரக்கு ஆட்டோேவில் வந்தார். அவரிடம் உரிய ஆவணமில்லாததால், 57 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மொத்தம், 3.24 லட்சம் ருபாயும், கோபி தாலுகா ஆபீசில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை