உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அமைச்சர் உறுதி தந்தும் நிறைவேற்றப்படாத கோரிக்கை சென்னிமலை அருகே கறுப்புக்கொடி கட்டி கண்டனம்

அமைச்சர் உறுதி தந்தும் நிறைவேற்றப்படாத கோரிக்கை சென்னிமலை அருகே கறுப்புக்கொடி கட்டி கண்டனம்

சென்னிமலை: அமைச்சர் உறுதி தந்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சென்னிமலை அருகே கறுப்புக்கொடி கட்டி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் சாய ஆலை கழிவு நீர் சென்னிமலை யூனியன், பாலதொழுவு குளத்துக்கு வரகூடாது என சில மாதங்களாக மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெருந்துறை மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில், மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்தாமல், கூட்டம் நடக்கும் அரங்கத்தை, அலுவலக அறையாக மாற்றியதை கண்டித்தும், மாசு ஏற்படுத்தும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை கோரியும், மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் கடந்த மாதம், 5ம் தேதி மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக, 42 பேர் மீது ஜாமினில் வரமுடியாத ஏழு பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதன் பின் அமைச்சர் முத்துசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதியளித்தனர். ஆனால், ஒரு மாதத்தை கடந்தும், ரத்து செய்யப்படவில்லை. இதை கண்டித்தும், வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும், சிப்காட் பகுதியை சுற்றியுள்ள பட்டாக்காரன்பாளையம், குள்ளம்பாளையம், பொன்முடி, கம்புளியம்பட்டி, ஈங்கூர், வரப்பாளையம், வாய்ப்பாடி, பனியம்பள்ளி, கூத்தம்பாளையம், சிறுக்கழஞ்சி, பாலதொழுவு, தளவாய்பாளையம், எல்லை கிராமம், ஓட்டப்பாறை, முகாசி பிடாரியூர் என, 15 ஊராட்சிகளில் சுதந்திர தின விழாவையொட்டி நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், சிப்காட் சாய ஆலைகளுக்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். சிப்காட் பகுதிக்குள் செல்லும் நல்லா ஓடை தென்புறத்தில் சாய கழிவு நீரின் அடர்த்தியை கண்காணிக்க ஆன்லைன் டி.டி.எஸ்., மீட்டர் பொறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் பாலதொழுவு ஊராட்சி சாபமேடு பகுதியில் வசிக்கும் பிரபு என்பவர், வழக்கை வாபஸ் பெறக்கோரி, வீடுகளில் நேற்று கறுப்பு கொடி கட்டும் போராட்டம் அறிவித்து, தனது வீட்டில் கறுப்பு கொடி கட்டினார். இதையறிந்து சென்ற சென்னிமலை போலீசார், சமரசம் செய்து கொடியை அகற்றினர். சிப்காட்டில் போராடிய, ௪௨ பேர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறாவிட்டால், விரைவில் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை