உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழைய காலி அட்டை கடையில் தீ விபத்து

பழைய காலி அட்டை கடையில் தீ விபத்து

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தில், மாஸ் பேப்பர்ஸ் நிறுவனம் உள்ளது. இது ஆயில் பாக்கெட்கள் வைக்க பயன்படும் காலி அட்டைகளை வாங்கி விற்கும் கடையாகும். உரிமையாளர் மாரியப்பன் நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டி சென்று விட்டார். நேற்று அதிகாலை கடையில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியது. அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற, ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காலி அட்டைகளில் ஆயில் ஒட்டி கொண்டிருந்ததால் தீயை அணைக்க நீண்ட நேரம் ஆனது. கடையில் இருந்த பழைய காலி ஆயில் அட்டை முழுவதும் எரிந்து சாம்பலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை