உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடை, நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை

கடை, நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை

ஈரோடு:ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், இதர தொழில் நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள், தொழிலாளர்களுக்கு வெப்ப அலை தணிப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.ஈரோடு தொழிலாளர் இணை ஆணையர் பா.மாதவன் தலைமை வகித்தார். தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் வரவேற்றார். பல்வேறு நிறுவன உரிமையாளர்கள், வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். தங்கள் நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள், பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சரியான மற்றும் சுத்தமான கழிப்பறை, குளியலறை வசதி செய்து தர வேண்டும். பணியாளர்கள் தங்குமிடம், சரியான இருக்கை வசதி, சுழற்சி முறையில் பணியாளர்களுக்கு ஓய்வு மற்றும் சட்டப்பூர்வமான வேலை நேரம் ஆகியவை அமல்படுத்த வேண்டும்.அனைவரும் அருந்தும் வகையில், சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும். வெப்ப அலையை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, யோசனை தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ