உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கால்நடைகளுக்கு சுங்கவரி ரத்து செய்யக்கோரி முறையீடு

கால்நடைகளுக்கு சுங்கவரி ரத்து செய்யக்கோரி முறையீடு

ஈரோடு;பாரதீய மஸ்துார் சங்கம் சார்பில், அந்தியூர் ஒன்றிய அமைப்பாளர் துரைசாமி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: ஆக.,7 முதல், 11ம் தேதி வரை தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற அந்தியூர் குருநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி மிகப்பெரிய அளவில் கால்நடை சந்தை நடக்கும். இதற்கு கொண்டு வரப்படும் வரும் கால்நடைகள், வாகனங்களுக்கு சுங்க வரி வசூலித்தனர். கொரோனா காலத்தில் சுங்க வரி நிறுத்தப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் டூவீலர், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி செய்து தராமலே, கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தாண்டு போதிய இடவசதி செய்து கொடுத்த பின்னரே, கட்டணம் வசூலிக்க, கடைகள் அமைக்க ஏலம் விட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ