உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நல் ஆளுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நல் ஆளுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிக்கை:நடப்பு ஆண்டுக்கான முதல்வரின் நல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட உள்ளது. அரசு ஊழியர் மற்றும் தனிநபர்; குழுவினர்; அமைப்பு, நிறுவனம், அலுவலகம் என மூன்று பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.சிறப்பாக பணிபுரிவோர், புதிய யுத்திகள், புதிய முயற்சி மற்றும் சிறந்த வழிமுறைகளை செயல்படுத்தியதன் வாயிலாக, பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க பணியாளர்களை வழிநடத்துவோர் விண்ணப்பிக்கலாம்.தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, நல்லாளுமை விருதுடன், 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை, சுதந்திர தின விழாவின்போது, முதல்வரால் வழங்கப்படும். தகுதியுள்ளோர், உரிய ஆவணங்களுடன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கும் சமூக நல அலுவலகத்தை அணுகி, நாளைக்குள் (11ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை