| ADDED : ஜூன் 23, 2024 02:39 AM
ஈரோடு:போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து, துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், ஈரோட்டில் நடந்தது. இதில் தலைமை வகித்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: மாவட்டத்தில் புகையிலை, குட்கா, பான் மசாலா, கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க, போலீஸ், சுகாதாரம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூட்டு தணிக்கையில் ஈடுபட்டு, போதை பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும்.பள்ளி, கல்லுாரி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கடைகளை தனிக்கவனம் செலுத்தி கூட்டு குழு மூலம் ஆய்வு செய்யுங்கள். போதை பொருள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதித்தும், கடைகளை 'சீல்' வைத்து, விற்பனையில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்கள் விற்பனை குறித்த புகாரை, 10581, 94429-00373 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் எஸ்.பி., ஜவகர், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குதுரத்துல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.