ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதியில், கடந்த 19ல் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 1 மணி நேரத்துக்கு பின்
மத்திய துணை பாதுகாப்பு படை, அதிரடிப்படை, உள்ளூர் போலீசார் என, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 6 சட்டசபை தொகுதிக்கான இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையையும், எட்டு 'சிசிடிவி' கேமரா வாயிலாக கண்காணிக்கின்றனர்.மொத்தம், 221 'சிசிடிவி' கேமராக்கள் வாயிலாக அவற்றை கட்டுப்பாட்டு அறையில் உள்ள, எல்.இ.டி., - 'டிவி'களில் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், அரசு அலுவலர்கள், 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர்.இந்நிலையில், ஈரோடு மேற்கு தொகுதிக்கான, 'சிசிடிவி' நேற்று முன்தினம் பழுதாகி, காட்சிகள் தெரியாமல் போனது. தகவல் அறிந்து, மாற்று, 'சிசிடிவி' பொருத்தப்பட்டது. பழுதான, 'சிசிடிவி' கேமரா அகற்றப்பட்டு, 1 மணி நேரத்துக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு குமாரபாளையம் சட்டசபை தொகுதியை கண்காணிக்க வைக்கப்பட்ட, 40க்கும் மேற்பட்ட கேமராவில் பதிவாகும் காட்சிகள், கட்டுப்பாட்டு அறையில் உள்ள, 'டிவி'களில் தெரியவில்லை. கள ஆய்வு
இதுபற்றி, வேட்பாளர்களின் பிரதிநிதிகள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் சரி செய்து காலை, 9:00 மணிக்கு மேல் காட்சிகள் மீண்டும் ஒளிபரப்பானது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட அறிக்கை:நேற்று காலை, 7:00 மணிக்கு கட்டுப்பாட்டு அறையில், குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கான, 'டிவி' சாதனங்கள், 'சிசிடிவி' பதிவுகள் தெரியவில்லை என தகவல் கிடைத்தது. இணைப்புகள் சரி செய்யப்பட்டு காலை, 9:00 மணிக்கு கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைக்காட்சி சாதனத்தில் ஒளிபரப்பு தெரிந்தது.இதுபற்றி, நியமனம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பி, மீண்டும் இணைப்புகளை கள ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கவும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாவண்ணம் இருக்க உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுஉள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.