ஈரோடு, ஈரோட்டில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.பி.எஸ்.பார்க்கில் உள்ள கருணாநிதி சிலைக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., மாநகர செயலர் சுப்பிரமணியம் தலைமையில் மாலை அணிவித்தனர். மாநில நிர்வாகிகள் சச்சிதானந்தம், குமாரசாமி, மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், செல்லபொன்னி, பழனிசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். பின், ஈரோடு பெரியார் நகரில் உள்ள அமைச்சர் முத்துசாமி முகாம் அலுவலகம், மணல்மேட்டில் உள்ள தி.மு.க., கட்சி அலுவலகம், ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள கருணாநிதி சிலைகளுக்கு தி.மு.க.,வினர் மரியாதை செலுத்தினர்.ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஈ.வி.கே.சம்பத் நகரில், மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநகர் துணை அமைப்பாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.* டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு, ஈரோடு தி.மு.க., வடக்கு மாவட்ட செயலர் நல்லசிவம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலர் சிவபாலன், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* புன்செய் புளியம்பட்டி நகர, தி.மு.க.,சார்பில் செயலர் சிதம்பரம் தலைமையில் நேற்று ஊர்வலமாக வந்து, பஸ் ஸ்டாண்ட் அருகே அம்மா உணவகம் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, கருணாநிதி படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* அந்தியூர் பேரூர் செயலர் காளிதாஸ் தலைமையில், எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் முன்னிலையில், மாவட்ட செயலர் நல்லசிவம், டவுன் பஞ்., தலைவர் பாண்டியம்மாள் உட்பட பலர், அந்தியூர் ரவுண்டானா, சிங்கார வீதி பகுதிகளில், அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர்.