உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்தியா 3வது உலக வல்லரசாக மாறும் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் தகவல்

இந்தியா 3வது உலக வல்லரசாக மாறும் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் தகவல்

ஈரோடு : ''எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில், மூன்றாவது உலக வல்லரசாக இந்தியா மாறும்,'' என, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.ஈரோடு, கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடந்த பா.ஜ., நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின், கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:சில பேருக்கு சில ஆசைகள். சில பேருக்கு நாட்டின் நலன் மீது மட்டுமே ஆசை. எது வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கிறார்களோ அது வெற்றி பெற்றிருக்கிறது. நீட் தேர்வு குளறுபடி குறித்து, முதல் கையெழுத்தாக ஒழித்து விடுவோம் என்று கூறியவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்டு உழைக்கும் பிரதமராக மோடி உள்ளார். அதனால்தான் மூன்றாவது முறையாக, மக்கள் அவரிடம் நம்பிக்கை வைத்து ஆட்சியை அளித்து உள்ளனர். ஐந்தாவது உலக வல்லரசாக இருக்கும் இந்தியா, ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது உலக வல்லரசாக மாறும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி