உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜி.எஸ்., கல்லுாரியில் கார்கில் வெற்றி நிகழ்ச்சி

ஜி.எஸ்., கல்லுாரியில் கார்கில் வெற்றி நிகழ்ச்சி

காங்கேயம்: காங்கேயம் ஜி.எஸ்., உடற்கல்வியியல் கல்லுாரியில், கார்கில் வெற்றி தின நிகழ்வு கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் முன்னிலை வகித்தார். விழாவில் உடற்கல்வி மாணவியர்-மாணவரிடையே கருத்துரு-வாக்க போட்டி, வீடியோ உருவாக்க போட்டி, கட்டுரை போட்டி நடந்தது. இதில் சிறந்த மாணவர்களின் தேர்வுகள், பல்கலை கழ-கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் விளையாட்டு பல்கலை துணைவேந்தர் சுந்தர், பதிவாளர் லில்லி புஷ்பம் மேற்காட்டுத-லின்படி நிகழ்வு நடந்தது. கல்லுாரி தாளாளர் ஜான்சிராணி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ