உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்துக்க, 14 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 92.50 ரூபாய் முதல் ௧05 ரூபாய் வரை, 6.80 குவிண்டால் தேங்காய் பருப்பு வரத்தாகி, 54,950 ரூபாய்க்கு விற்றது.* சத்தி பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை, 1,140 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல்முல்லை, 595, காக்கடா,425, செண்டுமல்லி,42, கோழிகொண்டை,87, ஜாதிமுல்லை,500, சம்பங்கி,180, அரளி,180, துளசி,50, செவ்வந்தி,160 ரூபாய்க்கும் விற்பனையானது.* புன்செய்புளியம்பட்டி நேற்று கூடிய கால்நடை சந்தைக்கு, 20 எருமை, 200 கலப்பின மாடு, 80 கன்றுகள் 200 ஜெர்சி மாடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். எருமை, 22-38 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 22-43 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 21-52 ஆயிரம், சிந்து, 19-44 ஆயிரம், நாட்டுமாடு, 40-76 ஆயிரம் ரூபாய் வரை, விற்றது. வளர்ப்பு கன்றுகள் 5,000 முதல், 16 ஆயிரம் வரையும் விற்பனையானது. இதேபோல், 300க்கும் மேற்பட்ட ஆடுகள் வரத்தாகி, 10 கிலோ வெள்ளாடு, 6,500 ரூபாய்; ௧௦ கிலோ வரையிலான செம்மறி ஆடு, 6,000 ரூபாய்க்கும் விற்றது.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு, பச்சை நிலக்கடலை, 10 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 25.22 - 40.29 ரூபாய்; காய்ந்த நிலக்கடலை, 129 மூட்டை வரத்தாகி, கிலோ, 68.29 - 74.29 ரூபாய்க்கும் விற்றது.* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு, 1,239 மூட்டை வந்தது. ஒரு கிலோ நிலக்கடலை, 61.20 ரூபாய் முதல், 72.10 ரூபாய் வரை, 39.76 டன் நிலக்கடலை, 26.௦௫ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, 6,000 ரூபாய் முதல், 20,000 ரூபாய் மதிப்பில், 60 கன்று, 20,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை, 22,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடு, 65,000 ரூபாய்க்கு மேலான விலையில், 50 கலப்பின உயர்ரக மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில விவசாயிகள், வியாபாரிகள் வாங்கி சென்றனர். வரத்தான கால்நடைகளில், 90 சதவீதம் விற்பனையானது.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 70 ரூபாய், நேந்திரன், 45 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 600, தேன்வாழை, 670, செவ்வாழை, 1,000, ரஸ்த்தாளி, 710, பச்சைநாடான், 530, ரொபஸ்டா, 510, மொந்தன், 360 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 8,350 வாழைத்தார்களும், 14.90 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி