உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறையிலிருந்து ரிலீஸ்ஆனவர் மீண்டும் கைது

சிறையிலிருந்து ரிலீஸ்ஆனவர் மீண்டும் கைது

பவானி;அம்மாபேட்டை அருகே குறிச்சி மலைக்கரட்டில், மரங்களை வெட்டி, குடிசைகள் அமைத்து, சாலை அமைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, 101-வது பிறந்த நாளை முன்னிட்டு, இலவசமாக வீட்டுமனை வழங்கப்படும் எனவும் பிளக்ஸ் வைக்கப்பட்டது. இதையறிந்த குறிச்சி வி.ஏ.ஓ., ராஜா மற்றும் வருவாய் துறையினர் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்தியூர், பச்சாம்பாளையத்தை சேர்ந்த மோகன், 47, தகாத வார்த்தை பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில், வி.ஏ.ஓ., தரப்பில் புகார் தரப்பட்டது. முன்னதாக மலைக்கரட்டில் சாலை அமைத்ததை தட்டிக்கேட்ட தி.மு.க., நிர்வாகியை தாக்கிய புகாரில், மோகனை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்திருந்தனர். இந்த வழக்கில் விடுதலையான மோகனை, வி.ஏ.ஓ.,வுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், போலீசார் கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக ஒரு பெண்ணை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை