உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்குய்யனுார் எஸ்.டி.எப்.,கேம்ப் பின்புறம் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று காலை வித்தியாசமான சத்தம் கேட்டது. கிணற்றை எட்டி பார்த்தபோது ஒரு காட்டெருமை தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக சத்தி வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம், வனத்துறையினர் சென்றனர். மயக்க ஊசி செலுத்தி, 50 அடி ஆழ கிணற்றிலிருந்து கிரேன் மூலம் மீட்டனர். ஒன்பது வயதான காட்டெருமை என்பதும், இரை தேடி வந்த போது கிணற்றில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்த வனத்துறையினர், பண்ணாரி வனப்பகுதிக்குள் எருமையை விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !