உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில்களில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு

கோவில்களில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு

பு.புளியம்பட்டி, ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி, புன்செய்புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் செய்து, விபூதி அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இதேபோல் ஊத்துக்குளியம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், சவுடேஸ்வரியம்மன், ஆதி பராசக்தியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.*பவானிசாகர், டணாய்க்கன் கோட்டை கோவில், தொட்டம்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது.* சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர். அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.* கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நேற்று காலை முதல், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரேயுள்ள குண்டத்தில் பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன், கலிங்கியம் கரிய காளியம்மன், கோபி சாரதா மாரியம்மன், பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ