| ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
அந்தியூர்: அந்தியூர் குருநாதசுவாமி கோவில் ஆடி தேர்த்தி-ருவிழா ஆக., 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை நடக்கிறது. இந்நாட்களில் தமிழகம் உட்பட மாநி-லத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு கால்நடைகள் கண்காட்சிக்காகவும், விற்பனைக்-காகவும் உரிமையாளர்கள் கொண்டு வருவர். விழாவையொட்டி வெள்ளபிள்ளையார் கோவிலில் இருந்து, கெட்டிசமுத்திரம் பஞ்., அலுவலகம் வரை கடைகள் அமைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்வர். இந்த கடைகள் அமைப்பதற்கான ஏலம் நடப்பாண்டு ரத்து செய்யப்பட்டது.ஏலம் கூற யாரும் வராததால், கெட்டிசமுத்திரம் பஞ்., நிர்வாகமே கையில் எடுத்து, சாலையின் இருபுறங்களிலும் கடைகள் அமைத்தது.இதையறிந்து கடைகளில் இடம் பிடிப்பதற்காக, வியாபாரிகள் புதுப்பாளையத்துக்கு நேற்று வந்-தனர். பஞ்., நிர்வாகிகளுடன் வியாபாரிகள் பேச்-சுவார்த்தையில் ஈடுபட்டனர். சில வியாபாரிகள், நாங்கள் பல வருடங்களாக தொடர்ந்து கடை வைத்து வருகிறோம். எங்க-ளுக்கு இரண்டு, மூன்று கடை வேண்டும் என்றனர்.சில வியாபாரிகள், நாங்கள் இந்தாண்டு தான் புதியதாக கடை வைத்து வியாபாரம் செய்ய வந்துள்ளோம். எங்களுக்கு ஒரு கடையாவது கொடுங்கள் என அதிகாரிகளிடம் கூறினர்.இதனால் பஞ்., நிர்வாகம், ஒரு கடைக்கு மேல் யாருக்கும் கடை ஒதுக்கப்படாது.இதிலும் வழக்கமாக கடை அமைத்தவர்களுக்கே முன்னுரிமை தரப்படும்.அதேசமயம் புதிய வியாபாரிகளுக்கு கண்டிப்பாக கடை தருவதாகவும் பஞ்., அதிகாரிகள் கூறவே, வியாபாரிகள் கலைந்து சென்றனர்.